search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குதல்"

    மின்வயர்களை திருடிய போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ளது மீட் தெரு. இங்கு வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள், ஏராளமான கடைகள்-நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இதன் அருகாமையில் கல்லூரி ஒன்றும் உள்ளது.

    இதனால் தினமும் காலை முதல் இரவு வரை அதிகமான மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்புடனே காணப்படும். இந்த தெருவில் பாழடைந்த வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டின் முன் பகுதியில் இன்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

    நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் வளாகத்தில் முன் பகுதியில் இருவரும் அருகருகே இறந்து கிடந்தார்கள். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வடசேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்திற்கு சென்றனர்.

    காம்பவுண்ட் சுவரின் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 வாலிபர்களின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அவர்களது உடலில் மின் வயர்கள் கிடந்தன. மேலும் ஒருவரின் தொடைப்பகுதியில் மின்சாரம் தாக்கியதற்கான காயம் இருந்தது.

    இதனால் அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சப்ளை நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார், 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களில் ஒருவர் கோட்டார் பாறைக்கால் மடத்தெருவை சேர்ந்த தொன்போஸ்கோ (வயது20) என்பதும், மற்றொருவர் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்கிற ராபர்ட்(25) என்றும் தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் ஆவர்.

    அவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள்? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மின்வயர்களை திருடியபோது மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. நண்பர்களான தென்போஸ்கோ, ராபர்ட் ஆகிய இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

    தொன்போஸ்கோ மீது 3 வழக்குகளும், ராபர்ட் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. மது குடிக்கும் பழக்கம் உள்ள அவர்கள் சிறுசிறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதே போல் நேற்று இரவு மீட் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

    மின் இணைப்பு இல்லாமல் இருண்டுகிடந்த அந்த வீட்டில் மின்வயர்களை திருடுவதற்கு இருவரும் திட்டமிட்டுள்ளனர். அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள இரும்பு கேட்டுகள் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்ததால், அந்த வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்திருக்கின்றனர்.

    பின்பு அந்த வீட்டுக்குள் சென்று அங்கிருந்த மின் வயர்களை இருட்டுக்குள் நின்றபடி வெட்டி திருடியிருக்கின்றனர். திருடிய மின்வயர்களை சுருட்டிய படி வீட்டிற்கு வெளியே வந்திருக்கின்றனர். அந்த வீட்டின் வளாகத்தில் இருந்த “ஸ்டே” கம்பியையும் அறுத்து எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

    அப்போது “ஸ்டே” கம்பி மின் கம்பத்தில் உள்ள மின் வயரில் பட்டிருக்கிறது. இதனால் “ஸ்டே” கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரையும் தாக்கியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்திருக்கின்றனர்.

    இரவு நேரம் என்பதாலும், சம்பவம் நடந்த வீடு இருண்டு கிடந்ததாலும் இந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. இன்று காலையே அந்த வழியாக சென்றவர்கள், வாலிபர்கள் இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்திருக்கின்றனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 2 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாழடைந்த வீட்டுக்குள் 2 வாலிபர்கள் இறந்துகிடந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.

    இதனால் அந்த வழியாக வேலைக்கு சென்ற தனியார் நிறுவனம் மற்றும் கடை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு விட்டனர். அவர்கள் பிணமாக கிடந்த 2 வாலிபர்களின் பிணத்தையும் பார்த்தபடி சென்றனர். ஏராளமானோர் திரண்டுவிட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    மின்வயர்களை திருடிய போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக இவரது வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் சரி செய்யாததால் நேற்று பகல் 12 மணி அளவில் பழனி வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திடீரென அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு அருகே கிரைண்டர் சுவிட்ச் போடும் போது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவையாறு:

    திருவையாறு அருகே நடுக்கடை ஹத்திஜா நகரைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 34). இவரது மனைவி ஹத்திஜா பீவி (26). இவர்களுக்கு முகமது உஸ்மான் (3) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹத்திஜா பீவி கிரைண்டரில் அரிசியைப் போட்டுவிட்டு மாவு அரைக்க சுவிட்சை போடும் போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹத்திஜாபீவி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே ஹத்திஜாபீவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதுகுறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மின்சாரம் தாக்கியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாழைகொம்பை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ்சில் கீளினராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தேவசாதன்புதூரில் உள்ள தனது உரிமையாளரின் தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் சென்ற மின்சார வயரை மிதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவலாளி உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ அருகே மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதன் அருகில் போக்குவரத்து சிக்னல் கம்பமும், மின் கம்பமும் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த சக்திவேல் பணி முடிந்து வெள்ளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது வெள்ளத்தில் பாய்ந்து இருந்த மின்சாரம் சக்திவேல் மீது தாக்கியது. இதில் வெள்ளத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    போக்குவரத்து சிக்னல் கம்பம் மற்றும் மின் கம்பம் அருகில் சிறிய மின்சாதன பெட்டி உள்ளது. அதில் இருந்துதான் மின்சாரம் பாய்ந்து சக்திவேலின் உயிரை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீஸ் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் போலீசார் காவலாளியின் உடலை வெள்ளத்தில் இறங்கி மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதார் அட்டையை வைத்துதான் அவரது பெயர் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் திருவல்லிக்கேணி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அஅங்கு சென்று விசாரித்த போது சக்திவேல் மாதவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தது தெரியவந்ததது.

    சக்திவேலுக்கு 50 வயதாகிறது. அவர் உயிரிழந்ததை பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சக்திவேலின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அடுத்து மந்தைவெளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சக்திவேல் உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே சக்திவேல் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே லாரி மீது ஏறிய டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து மர பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலத்துக்கு புறப்பட்டது. லாரியை குடகு மாவட்டம், கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சாகர் (22) என்பவரும் உடன் வந்தார்.

    லாரி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில் வந்தது. இந்த பகுதிகளில் மழை பெய்து இருந்ததால் அந்த பகுதியில் உள்ள மண்ணில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைந்தது. அதனால் லாரியை மஞ்சுநாதனால் தொடர்ந்து இயக்க முடியவில்லை.

    இது குறித்து மஞ்சுநாதன் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். லாரி உரிமையாளர் 3 பேரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியை மீட்க கிரேன் அழைத்து வருவதாக உரிமையாளர் மற்றும் அவருடன் வந்த 3 பேர் சென்று விட்டனர். மஞ்சுநாதன், சாகர் மட்டும் லாரியில் இருந்தனர்.

    இதனையடுத்து பாரம் தாங்காமல் சக்கரம் மண்ணில் இறங்கவே, லாரியின் பாரத்தைக் குறைக்கும் வகையில் டிரைவர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறினார். மரக்கட்டைகளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்தார். அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பி மீது மஞ்சுநாதன் கைப்பட்டது.

    இதனால் மஞ்சுநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தென்தாமரைக்குளத்தில் இன்று மின்சாரம் தாக்கி பால் வியாபாரி மற்றும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்தாமரைக்குளம்:

    தென்தாமரைக்குளம் பள்ளிக்கூடம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் மாணிக்கராஜ்(வயது66). அவரது மனைவி சொர்ண சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இதனால் ஆல்பர்ட் மாணிக்கராஜ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ஆல்பர்ட் மாணிக்கராஜ் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். மாடுகளை கட்டிவைக்க தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்திருந்தார். அதில் மாடுகளை கட்டிவைத்து பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டின் மாட்டு கொட்டகை சேதமடைந்திருக்கிறது. இதனால் அவரது வீட்டிற்கும், மாட்டு கொட்டகைக்கும் இடையே மழைநீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் வீட்டினுள் தண்ணீர் வந்த படி இருந்திருக்கிறது.

    ஆகவே மாட்டுக்கொட்டகையை சரிசெய்ய ஆல்பர்ட் மாணிக்கராஜ் திட்டமிட்டார். இதற்காக தென்தாமரைக்குளம் பால்பண்ணை தெருவை சேர்ந்த பகவதியப்பன்(66) என்ற தொழிலாளி இன்று வந்தார். அவர் ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டு மாட்டு கொட்டகையின் மேல் பகுதிக்கு செல்ல இரும்பு ஏணியை பயன்படுத்தி ஏறியுள்ளார்.

    அப்போது மின்கம்பத்தில் இருந்து வரக்கூடிய சர்வீஸ் வயர் கொட்டகையை தொட்டபடி இருந்துள்ளது. அதில் இருந்து மின்சாரம் கொட்டகையில் பாய்ந்துள்ளது. இதனை அறியாத பகவதியப்பன், இரும்பு ஏணியை கொட்டகை மீது சரித்துவைத்து ஏறினார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனால் அவர் அலறி துடித்தார். அதனை பார்த்த ஆல்பர்ட் மாணிக்கராஜ் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பகவதியப்பன், ஆல்பர்ட் மாணிக்கராஜ் ஆகிய இருவரும் துடிதுடித்து இறந்தனர்.

    மின்சாரம் தாக்கி விழுந்த போது ஆல்பர்ட் மாணிக்கராஜ் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியின் மீது விழுந்து விட்டார். இதனால் அந்த கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவஇடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    மாட்டுக்கொட்டகையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மற்றும் பால் வியாபாரி மின்சாரம் தாக்கி பலியான தகவல் அந்த பகுதியில் பரவியது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும், கிராம மக்களும் அங்கு திரண்டனர்.

    பலியாகி கிடந்த இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதனர். தொழிலாளி பகவதியப்பனின் உடலை அவரது குடும்பத்தினர் கட்டியணைத்து அழுதது அந்த பகுதியில் திரண்டு நின்ற அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்த பரிதாப சம்பவம் குறித்து தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் பகவதியப்பன் மற்றும் ஆல்பர்ட் மாணிக்கராஜ் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி பால் வியாபாரி மற்றும் தொழிலாளி பலியான சம்பவம் தென்தாமரைக்குளம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பவானி அடுத்த சித்தோடு அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி:

    பவானி அடுத்த சித்தோடு நசியனூர் பள்ளி பாளையத்தில் ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் (44) என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தர்மபுரி போயர்தெரு தளவாய் அள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்பா (32) வேலை செய்யும் போது மின்சார மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணப்பாவின் கை தவறுதலாக பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனத்தை கழுவும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது25). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் இரு சக்கரவாகன நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்யம் பணி புரிந்து வந்தார். இவர் வழக்கம் போல மோட்டாரை இயக்கி தண்ணீரால் வாகனத்தை கழுவும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம் அருகே சாலையில் செல்லும்போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் நேற்று இரவு இதமான மழை பெய்து வந்தது.

    காவேரிபட்டணத்தை அடுத்த கால்வே அள்ளியை சேர்ந்த முனுசாமி (வயது 33) என்பவர் இப்பகுதியில் நிப்பட் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

    இவரிடம் கால்வே அள்ளி முத்தூராண் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 32) என்பவர் வேலைசெய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தை உள்ளது.

    இவர்கள் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நிப்பட்டை சரக்கு வண்டியில் ஏற்றுவதற்காக காவேரிப்பட்டணம் வந்துவிட்டு பின்பு இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது கத்தேரி பிரிவுரோடு அருகே பலத்த மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்து உள்ளது. இதனை அறியாத இவர்கள் அந்த வழியாக செல்லும்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இறந்தவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்த இருவர் பலியாகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×